மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
கலசப்பாக்கம் தொகுதிக்குப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணியினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணியினை கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (18.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story