சிவகாசியில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பும் பணிகள் தீவிரம்

சிவகாசியில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பும் பணிகள் தீவிரம்
சிவகாசியில் வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பும் பணிகள் தீவிரம்...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்.. விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரும் /பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில்வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவரும் /பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாக்கு சாவடிகளுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட 23 வகையான பொருள்கள் அனுப்பும் பணியும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 333 வாக்குச்சாவடி மையங்களுக்கும் இன்று மாலைக்குள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story