திருத்தணி கோவிலில் ராஜகோபுரம் வாசற்கல் அமைக்கும் பணி

திருத்தணி கோவிலில் ராஜகோபுரம் வாசற்கல் அமைக்கும் பணி

திருத்தணி கோவில் ராஜகோபுரம் வாசற்கல் அமைக்கும் பணி துவங்கியது.


திருத்தணி கோவில் ராஜகோபுரம் வாசற்கல் அமைக்கும் பணி துவங்கியது.

திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 2009ம் ஆண்டு நவ., 18ம் தேதி 123 அடி உயரமுள்ள ராஜகோபுரம், 3.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, பணி துவங்கியது. இரு ஆண்டுகளுக்கு முன் ராஜகோபுரம் பணி முழுமையாக முடிந்து வண்ணம் தீட்டப்பட்டது. தொடர்ந்து, ராஜகோபுரத்தில் இருந்து மலைக்கோவில் தேர்வீதிக்கு இணைப்பு படிகள் மற்றும் ராஜகோபுரம் வாசற்கற்கள் பதிக்கும் பணி பல மாதங்களாக துவக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து, கடந்தாண்டு உபயதாரர் வாயிலாக வாசற்கற்கள் பெறப்பட்டு, கற்களில் 'வேல் மற்றும் முருகா...' என்ற ஓவியம் வரையப்பட்டது. ஆனால், வாசற்கற்கள் பொருத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதனை, நேற்று முன்தினம் ராஜகோபுரத்திற்கு வாசற்கற்கள் பதிக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.

Tags

Next Story