காங்கேயத்தில் மழையிலும் விடாது சாலை அமைக்கும் பணி தீவிரம்

காங்கேயத்தில் மழையிலும் விடாது சாலை அமைக்கும் பணி தீவிரம்
காங்கேயத்தில் மழையிலும் விடாது சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது

திருப்பூர் மாவட்டம், காங்கேயம்- சென்னிமலை சாலை காங்கயம் பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள மிகவும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலையில் ஒன்றாகும். மேலும் இந்த பல வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வருவதாலும் அதிகமான வாகனங்கள் வந்து செல்லவதாலும் ஆங்காங்கே சாலை சேதமடைந்து காணப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள், கடைக்காரர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் புதிய சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் காங்கேயம் சென்னிமலை சாலையில் பேருந்து நிலையம் பின்புறம் கடந்த ஜூன் 3ஆம் தேதி பணி துவங்கிய நிலையில் நேற்று மாலை பெய்த மழையிலும் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

மிகவும் குறுகிய சாலை என்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் காரணத்தை கருத்தில் கொண்டு சாலை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால் காங்கயம் சென்னிமலை சாலை நேற்று முழுவதும் தடுப்புகளை கொண்டு வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. அதனையும் தாண்டி வழிதவறி வந்த வாகனங்கள் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

Tags

Next Story