சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு
சதுப்பு நிலக் காடுகள்
தமிழகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் அரசுக்கு அனுமதி அளித்திருந்தனர். முன்னோடி திட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு ஜூலை முதல் வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Next Story