பழங்குடியினர் 3 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை

பழங்குடியினர் 3 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை
வீடு கட்ட பணி ஆணை
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் பழங்குடியினர் 3 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது.கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த இருளர் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியினர் வழுதலங்குணம் சுசீலா,முருகேசன், சோமாசிபாடி கேவி அகிய 3பேருக்கு தலா ரூ 4லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. பயனாளிகள் 3 பேருக்கும் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கபார்,உதவியாளர் சீத்தாபதி,ஒன்றியகவுன்சிலர் பாக்கியலட்சுமி லோகநாதன், ஊராட்சிமன்ற துணைத் தலைவர்அவுல்தார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story