டெங்கு பரவல் தடுக்கும் பணி

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காலத்தை ஒட்டி டெங்கு பரவல் தடுக்கும் விதமாக தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காலத்தை ஒட்டி டெங்கு பரவல் தடுக்கும் விதமாக தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலத்தை ஒட்டி டெங்கு பரவல் தடுக்கும் விதமாக தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தீடிர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை முறையாக தூய்மை படத்தாமல் மற்றும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருப்பதை பார்த்து நகராட்சி ஆணையாளரை கடுமையாக கண்டித்தார் .

பின்னர் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சனம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பழைய இரும்புகடையில் தீடிர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மழைநீர் பிளாஸ்டிக் மற்றும் தகரம் பொருட்களில் மழைநீர் தேங்கி உள்ளதை மற்றும் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதைப் பார்த்து இரும்பு கடையின் உரிமையாளரை கடுமையாக எச்சரித்து உடனடியாக தூய்மை படுத்த உத்தரவு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story