போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

போக்சோ வழக்கில் கைது

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளியை போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த காடையூர் கிராமம், பொத்தியபாளையம் ஊராட்சி இல்லியம்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரது மகன் சூர்யபிரகாஷ் என்கிற சண்முகம். இவர் அப்பகுதியில் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அப்பகுதியில் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் அந்த சிறுமியை மிரட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மகளிர் போலிஷார் வழக்கு பதிவு செய்து சூர்யபிரகாஷை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story