கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

கன்னியாகுமரி அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் அஜித் (35) இவர் கேரளாவில் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சலீனா (24) என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் அஜித் சொந்தமாக வீடு கட்டி குடியேறியுள்ளார்.

வீடு கட்டுவதற்காக மனைவியின் நகைகள் அனைத்தும் அடமானம் வைத்ததுடன், அனேகரிடம் அதிகமாக கடன் வாங்கி உள்ளார். கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சலீனா கோபித்துக் கொண்டு கடந்த 10 மாதங்களுக்கு முன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அஜித் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

கடந்த எட்டாம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக மனைவியை அஜீத் அழைத்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு அணிந்து செல்ல நகைகள் இல்லாததால் மனைவி திருமணத்திற்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அஜித் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story