வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை

வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை
நாகை மாவட்டம், காக்காமங்கலம் பகுதியில் தீராத வயிற்றுவலியால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சி காக்காமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் சௌந்தரராஜன் (வயது 56).கூலித் தொழிலாளி.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது.மேலும் 6 மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சௌந்தரராஜன் விஷம் குடித்து வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார்.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சௌந்தரராஜனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சௌந்தரராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் இறந்த சௌந்தரராஜன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சௌந்தரராஜன் மனைவி வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story