சிவகாசி அருகே தொழிலாளி தற்கொலை
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சுக்கிரவார்பட்டியைச் பகுதியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் சுக்கிரவார்பட்டியைச் சேர்ந்தவர் மாயன் (44).கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் வீட்டுக் கடன் மற்றும் மகளின் கல்யாண செலவு என சுமார் ரூ.8 லட்சம் கடன் இருப்பதாக கடந்த ஒரு வாரமாக புலம்பி வந்துள்ளார். இதற்கு மனைவியும் மகனும் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story