தொழிலாளி தற்கொலை
தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தேவனாம்பட்டு ஊராட்சி காட்டுப்புத்தூர் காலனியை சேர்ந்தவர் அயோத்தி (வயது 47). கூலித் தொழிலாளி.அயோத்தி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றை மாட்டி அயோத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story