குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
X
தொழிலாளி பலி 
கன்னியாகுமரி மாவட்டம், குளைச்சல் அருகே பூப்பறிக்க முயன்ற போது குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வன் ( 61). தொழிலாளி. நேற்று காலை செல்வன் அருகில் உள்ள குளத்திற்கு தன் மகள் ஷைனிமலர் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் குளிக்க சென்றார்.

அங்கு குளித்துக் கொண்டிருந்த போது குளத்தில் பூத்துள்ள ஆம்பல் பூவை கண்டு குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்டனர். பூ பறிக்க செல்வன் குளத்தின் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார். இதில் ஆம்பல் கொடி மற்றும் பாசியில் சிக்கியதால் அவரால் தொடர்ந்து நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் சத்தம் போட்டனர். அப்போது அக்கம் பக்கத்தினர் இது குறித்து திங்கள் சந்தை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் செடி கொடிகளுக்கு இடையே தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் செல்வனின் உடலை மீட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வனின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story