வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த தொழிலாளி பலி

வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த தொழிலாளி பலி

 விஷம் குடித்த தொழிலாளி பலி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த தொழிலாளி பலி - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை .
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அருகன்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ராமசாமி (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி. தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. தகராறு ஏற்படும் போது ராமசாமி அவரது அம்மா வீட்டுக்குச் சென்று விடுவாராம். கடந்த 20ம் தேதி காளீஸ்வரிக்கு அவரது அண்ணன் செந்தட்டி காளை பாண்டியன் போன் பே மூலம் ரூ. 500 அனுப்பியுள்ளார். இதனால் ராமசாமி தனது மனைவி யிடம் உனக்கு யார் பணம் எதற்காக அனுப்பினார்கள் என கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு காளீஸ்வரி எனது அண்ணன் பணம் அனுப்பியுள்ளார் என கூறியுள்ளார். ஆனால் அதனை ராமசாமி கேட்காமல் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே ராமசாமி வயலுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்று அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பின்னர் அவர் போன் மூலம் தனது தங்கை மகன் அருண்குமாருக்கு போன் செய்து விஷம்குடித்து விட்டதாக தெரிவித்துள் ளார். அருண்குமார் வயலுக்கு சென்று ராமசாமியை கரிவலம் வந்த நல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story