முத்தூர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

முத்தூர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

காவல் நிலையம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த முத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா தட்டாம்பாளை யம் முத்தையன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 49). தொழிலாளி. இவர் நேற்று காலை 6.30 மணிக்கு முத்தூர் - கொடுமுடி சாலை சாலி யங்காட்டுபள்ளம் பஸ் நிறுத்தம் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு காயம் அடைந்த சுப்பிரமணியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story