தக்கலை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தக்கலை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
X
இறந்த எட்வின் ராஜ்
தக்கலை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குருவிக்காடு பகுதியை சேர்ந்தவர் எட்வின்ராஜ் (27). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வினோதினி (24) இருவரும் காதலித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் இரவு எவின் ராஜ் மோட்டார் சைக்கிளில் உணவு வாங்குவதற்காக அழகிய மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கடமலைகுன்று பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தில் கிடந்த ஜல்லியில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, நிலை தடுமாறி எட்வின் ராஜ் கீழே விழுந்துடு காயமடைந்தார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இருந்தார். இந்த விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story