தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

காவல் நிலையம் 

இரணியல் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (47) தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருக்கு நாராயணி என்ற மனைவியும் மூன்று மகன்கள் உள்ளனர். நேற்று மாலை குமார் குருந்தன்கோடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது தென்னை மரத்தில் இருந்து கீழே இறங்கும்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு தலை, உடல் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குமார் உயிர் இழந்தார். இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீராம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story