மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
தம்மம்பட்டி அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி கல்ஒட்டர் தெருவில், புதியதாக மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. ஆத்தூர், மல்லியகரை அருகே கோபாலபுரத்தைச் சேர்ந்த வரதராஜன்(54) என்பவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இரும்பிலான சென்ட்ரிங் பலகையை எடுத்தபோது, அவரது வலதுகால் அருகே சென்ற மின்கம்பியில் உரசியது. இதில், உடலில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட வரதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story