மீன் பிடித்த போது ஏரியில் மூழ்கிய தொழிலாளி பலி !

மீன் பிடித்த போது ஏரியில் மூழ்கிய தொழிலாளி பலி !

பலி

கருப்பூர் அருகே மீன் பிடித்த போது ஏரியில் மூழ்கிய தொழிலாளி பலியானார்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 39). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மீரா. இவர் மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இதனிடையே நேற்று மதியம் மோகன் கருப்பூர் அருகே உள்ள மேட்டுப்பதி பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் இருந்து மோகனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிேரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story