மனைவி தற்கொலை வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை !
சிறை
குமரி மாவட்டம் மயிலாடி அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் ரவி (42) தொழிலாளி. இவருக்கும் புத்தளம் சர்ச் தெருவை சேர்ந்த சேர்ந்த விஜி (25) என்பவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. திருமணத்தின்போது ரவிக்கு பெண் வீட்டார் சார்பில் 41 பவுன் நகையும், ரூபாய் 2 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான பிறகு விஜியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ரவி அடிக்கடி தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விஜி தனது தாயார் பஞ்சவர்ணக்களி வீட்டிற்கு சென்று, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் முன்னிலையில் கணவன் மனைவி இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் விஜி இடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு ரவி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் மணமடைந்த விஜி கடந்த 11- 9 - 2012 ஆம் ஆண்டு காமராஜர் நகரில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து விஜயின் தாயார் பஞ்சவர்ணக்கிளி கொடுத்த புகாரின் பேரில் அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் உள்ள மகிளா விரைவு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ரவிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.