குளச்சலில் சத்தமாக செல்போனில் பேசிய தொழிலாளிக்கு அடி உதை
கன்னியாகுமரி மாவட்டம்,குளச்சலில் குளச்சலில் சத்தமாக செல்போனில் பேசிய தொழிலாளியை தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் சி ஆர் எஸ் நகரை சேர்ந்தவர் ராஜன் மகன் அபிஷன் (26). இவர் கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவ தினம் தொழில் முடிந்து மாலை மீன்பிடி வள்ளத்தை குளச்சல் துறைமுகத்தில் நிறுத்திவிட்டு, பயணியர் விடுதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே செல்போனில் அவர் சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பக்கத்து மேஜையில் மது அருந்திக் கொண்டு இருந்த இரண்டு பேர் மெதுவாக பேசுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டது. பின்னர் அபிஷன் எழுந்து வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் தகராறு ஈடுபட்ட இரண்டு பேரும் அபிஷனை பின்தொடர்ந்து மீண்டும் வாய் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த 2 பேருடன் மேலும் ஆறு பேரும் சேர்ந்து அபிஷனை தாக்கி செல்போனை பறித்து உடைத்து மிரட்டி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அபிஷன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் கண்டால் தெரியும் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story