மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - அதிர்ச்சியில் இறந்த தாய்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - அதிர்ச்சியில் இறந்த தாய்
X
கிறிஸ்டோபர்
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (50). இவர் கடந்த சில வருடங்களாக மணவாளக்குறிச்சி அருகே கூட்டு மங்கலம் பகுதியில் உள்ள ஒரு படகு கட்டும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று பிற்பகல் வழக்கம் போல் அவர் படகு கட்டும் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். படகு வேலைக்காக கூடத்தில் உள்ள அவிட்ச் போர்டில் பிளக்கை பொருத்தும் போது, எதிர்பாராமல் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சுவிட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டு கிறிஸ்டோபர் மீது மின்சாரம் பாய்ந்து இறந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த மனவளக்குறிச்சி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிறிஸ்டோபர் மின்சாரம் தாக்கி இறந்த தகவல் அவர் தாயார் ரோஸ்மேரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்தார். சிறகு நேரத்தில் ரோஸ்மேரியும் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story