சித்தேரிப்பட்டு அருகே பேருந்து மோதி தொழிலாளி பலி

X
சாலை விபத்தில் உயிரிழப்பு
தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் காட்டுக்கொட்டகையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் முருகன்,36; விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு மூரார்பாளையத்தில் உள்ள தனது மகளை அழைத்து வருவதற்காக தியாகதுருகம்- சங்கராபுரம் சாலையில் பைக்கில் சென்றார். சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது விரியூரில் இருந்து வந்த தனியார் பள்ளி பஸ், முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags
Next Story
