மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
வாசுதேவநல்லூர் அருகே புல் அறுக்க சென்ற தொழிலாளி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தேவிபட்டணம், ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன்(35). விவசாயத் தொழிலாளி. இவா் நேற்று மாலையில் தனியாா் நிலத்தில் புல் அறுக்க சென்றபோது, அறுந்து கிடந்த மின் கம்பியில் எதிா்பாராமல் மிதித்தாராம். இதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விரைந்து சென்று போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story