தொழிலாளி கொலை - கண்காணிப்பு கேமராவில் சிக்கியவருக்கு வலை

தொழிலாளி கொலை  - கண்காணிப்பு கேமராவில் சிக்கியவருக்கு வலை

நாகர்கோவிலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி கேமிராவில் சிக்கிய குற்றவாளியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.


நாகர்கோவிலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி கேமிராவில் சிக்கிய குற்றவாளியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (32). துப்புரவு தொழிலாளி. கடந்த மாதம் குமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா வசனத்தில் சடலமாக கிடந்தார். கோட்டார் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். முதலில் பால்ராஜ் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்கு பதிவானது.

பிரேத பரிசோதனையில் பால்ராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் சம்பவ தினம் பால்ராஜ்க்கும் வாலிபர் ஒருவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டு அந்த வாலிபர் பால்ராஜை தாக்கி கொலை செய்திருப்பது கண்காணிப்பு கேமராவில் உறுதியானது.

சிசிடிவி கேமராவின் காட்சியில் அந்த வாலிபரின் முகம் பதிவாயுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதனால் கொலையாளியின் புகைப்படத்தை கோட்டார் போலீசார் வெளியிட்டுள்ளனர். அவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டார் போலீசார் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த போட்டோவை குமரி மாவட்டம் தவிர வெளி மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

Tags

Next Story