பட்டாசு வெடித்ததில் தகராறு: தொழிலாளி குத்திக் கொலை

பட்டாசு வெடித்ததில் தகராறு: தொழிலாளி குத்திக் கொலை
கொலை
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை வனதுர்க்கை அம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

அப்போது, பட்டாசு வெடித்ததுதொடர்பாக தொழிலாளி எல். சின்னத்துரை (45), கே. குமார் (65) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, குமார் மற்றும் அவரது சகோதரர்கள் முத்துக்கருப்பன், துரை வெங்கடேஷ், மகன்கள் கபில்தேவ், சந்தானபாரதி ஆகியோர் சின்னத்துரையை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

இதையடுத்து, பலத்த காயம் அடைந்த சின்னத்துரையை அங்கிருந்தோர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், சின்னத்துரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குமாரை வியாழக்கிழமை கைது செய்தனர். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story