தொழிலாளி சாவில் திருப்பம் - கொலை அடித்துக் கொன்றது அம்பலம்

தொழிலாளி சாவில் திருப்பம் - கொலை அடித்துக் கொன்றது அம்பலம்
தாய்மாமா மாவை அடித்து கொன்றதாக கைதான ரஜிஷ் ராகேஷ்
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைகாடு பகுதியில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (57). கூலி தொழிலாளி. அவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். துரைராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. கடந்த மாதம் 7 ம்தேதி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த துரைராஜ் தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி அவரை குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மறுநாள் மதியம் துரைராஜ் வீட்டில் இருந்தபோது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து துரைராஜ் சகோதரி ரோஸ்மேரி என்பவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் துரைராஜன் மார்பு பகுதியில் கம்பால் தாக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. மேலும் அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளதாகவும் டாக்டர்கள் அறிக்கை தெரிவித்தது.

இதற்கிடையில் துரைராஜ் இறந்ததும் ரோஸ்மேரியன் மகன் ரஜிஷ் ராகேஷ் (23) என்பவர் தலைமறைவானார். இதனால் போலீசாரின் பார்வை ரஜிஷ் ராகேஷ் மீது திரும்பியது. அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்த போது, தாய் மாமா துரைராஜும் அவரும் சேர்ந்து மது அருந்துவதாகவும் கடந்த ஏழாம் தேதி மோதிரத்தை அடகு வைத்து மது அருந்தியதாகவும், அப்போது 2000 ரூபாயை மது வாங்கியதாகவும் மீதி 2000 ரூபாயை தாய் மாமா துரைராஜ் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கக மாற்றி ரஜிஷ் ராகேஷை கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story