தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
பைல் படம்
சேலம் அன்னதானப்பட்டி அல்லிக்குட்டை காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 27), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தீபாவளி பண்டிகையின் போது, முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அவர் கருவாட்டு மண்டி முருகன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும், ஆனந்துக்கும் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் ஆனந்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த ஆனந்த் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கத்திக்குத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த தயாளன் (38), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளி சங்கர் என்பவர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.