வேலை செய்யுமிடத்தில் பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி

வேலை செய்யுமிடத்தில் பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பொன்னம்பேட் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது32). இவர் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி அசோக் நகர் பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் கரூர் மாவட்டம் பெரிய கொத்தூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி (45) என்பவரும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ராஜேஸ்வரி தங்கியிருந்த பகுதியிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. உடனே சகதொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்தபோது ராஜேஸ்வரியின் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு மயங்கி கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ராஜேஸ்வரியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த போலீசார் விசாரணை நடத்தியதில் பழனிசாமி சரிவர வேலை செய்யாததால் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பழனிசாமி இதற்கு ராஜேஸ்வரிதான் காரணம் என நினைத்து அவரை கத்தியால் வயிற்றில் குத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பழனிசாமியை தேடிய போது அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

Tags

Next Story