பேரணாம்பட்டு அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

பேரணாம்பட்டு அருகே  பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

தீகுளிக்க முயன்ற தொழிலாளி 

பேரணாம்பட்டு அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஷம்ஷீர் (32). கூலித் தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பலானது இவரை மது குடிக்க வைத்து தகராறில் ஈடுபட்டு கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தது. இதில் ஷம்ஷீர் படுகாயமடைந்தார்.

இது குறித்து அவரது மனைவி ரஷீதாஷமீம், பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஷம்ஷீரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ஷம்ஷீர் தனது குடும்பத்தினருடன் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போலீசார் கூறியதை ஏற்று கொள்ளாத ஷம்ஷீர் போலீஸ் ஸ்டேஷன் கேட் முன்பாக தான் வைத்திருந்த பிளாஸ்டிக் கேனிலிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த பொதுமக்கள் ஓடிச் சென்று தடுத்து ஷம்ஷீரின் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீஸ் நிலைய வாயிலில் அமர்ந்து ஷம்ஷீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூச்சலிட்டார். இதனையடுத்து போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story