காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்

காட்டாறு வெள்ளம்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான காளிகேசம், கீரிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர், வாழை, அன்னாசி தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தற்போது அன்னாசி அறுவடை பணிகள் முழு வீச்சில் இந்த பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மலை கிராமங்களான தடிக்காரன்கோணம், வாழையத்தவயல், கீரிப்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய மிக கனமழை அந்த பகுதிகளில் பெய்து வருகிறது. இதன் காரணமாக காளிகேசம் பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலை திடீரென காட்டுவெள்ளம் சூழ்ந்தது. ஆனால் இது எதுவும் தெரியாமல் மறுகறையில் அன்னாசி அறுவடைக்கு சென்று இருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் உடனே புறப்பட்டு வெளியேற முடியாது. ஆனால் கோயிலை ஒட்டி சென்று காட்டாறு வெள்ளத்தில் தொழிலாளர்கள் சென்ற வாகனம் சிக்கி கொண்டது. அதிர்ச்சி அடைந்து தொழிலாளர்கள் வாகனத்தை விட்டு இறங்கினர். ஆனால் வெளியேற முடியாமல் தொழிலாளர்கள் அபய குரல் எழுப்பினர். உடனடி அந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் தொழிலாளர்களை கயிறு கட்டி ஒவ்வொருவராக மீட்டனர்.

Tags

Next Story