சேத்துப்பட்டு: தொழிலாளி தற்கொலை!
கோப்பு படம்
சேத்துப்பட்டு அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மதுரை பெரும்பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். . சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால் மன விரக்தியடைந்த பிரகாஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story