பீடி தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி !

பீடி தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி !
 ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி
தென்காசி அருகே பீடி தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாத புரம் பகுதியைச் சார்ந்த இன்பா (வயது 26) என்பவர் ஐஏஎஸ் தேர்வில் 851 வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இது பற்றி இன்பா கூறியதாவது: - எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர். அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றேன். நான் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிப்பதற்காக செங்கோட்டை ரயில்வே கேட் பகுதியில் உள்ள விஸ்வநாதபுரம் அம்பேத்கர் தெருவுக்கு வீட்டை மாற்றினோம். செங்கோட்டை அருகே தனியார் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளை படித்தேன். கோவையில் உள்ள சிஐடி தொழில்நுட்ப கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தேன். படிப்பு முடித்தவுடன் ஐஏஎஸ் தேர்வுக்காக சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன். அப்போது கொரோனா பரவிய காலம் என்பதால் ஆன்லைன் வகுப்பில் பயின்றேன். மூன்றாவது முறையாக எழுதி வெற்றி பெற்று சென்னையில் உள்ள தமிழக அரசு சிவில் சர்வீஸ் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து அங்கு தங்கி மூன்று ஆண்டுகள் பிரதான தேர்வுக்கு படித்தேன். இப்போது 851 வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறேன். எனது தந்தை சீனிவாசன் ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்தினர். எனது அம்மா ஸ்டெல்லா பீடி சுற்றும் தொழிலாளி. எனது அண்ணன் பாலமுரளி சவுதி அரேபியா கேஸ் கம்பெனி சூப்பர்வைசர். அவர்தான் என்னை ஐஏஎஸ் படிக்க ஊக்கப்படுத்தினார் என்றார்.

Tags

Next Story