கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தொழிலாளர்கள் கோரிக்கை
கோட்டாட்சியரிடம் மனு
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்தகோரி கட்டடத் தொழிலாளர்கள் பேரணியாக வந்து வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமியிடம் மனு அளித்தனர்.
சிமெண்ட், கம்பி, மின்சாதன பொருட்கள், டைல்ஸ், செங்கல், எம். சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ள நிலையில் கட்டிட தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. ஆரணி பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இத்தொழிலை நம்பியுள்ளனர். வேலை சரிவர இல்லாத நிலையில் விவசாய கூலி வேலை, மூட்டை தூக்கும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அன்னை அனைத்து கட்டிட தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் மாரி தலைமையில்ஆரணி அண்ணா சிலையிலிருந்து கட்டிடத்தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று ஆரணி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அம்மனுவில் திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியாக கட்டுமானப் பொருட்கள் விலைவாசி கட்டுக்குள் வைக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டி தற்போது 40 சதவீதம் வரை கட்டுமானப் பொருட்கள் விலைவாசி உயர்ந்துள்ளது. அதனை உடனடியாக குறைத்து வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. பேரணியில் ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பக்ருதீன் அலி அகமது, பொருளாளர் எஸ்.சந்திரசேகர்,கட்டுமான சங்கத்தின் மாநில செயலாளர் ஆர்.ராஜேந்திரன், மாநில பொருளாளர் சி.அசோகன், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், இளைஞரணித் தலைவர் அருணாசலம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், பில்டர்ஸ் சங்கத்தினர் மற்றும் ஆரணியில் உள்ள பல்வேறு சங்கத்தினர் கலந்துகொண்டு ஆதரவளித்தனர்
Next Story