திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்

குவிந்த கூட்டம் 

பொங்கல் பண்டிகை கொண்டாட திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு பனியன் நிறுவன தொழிலாளர்கள் செல்வதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால் திருப்பூருக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை தேடி வருகிறார்கள். தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்து வருவதால் உடனடியாக அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். திருப்பூரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

இதில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் 3 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த தமிழக தொழிலாளர்கள் தீபாவளி பொங்கல் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே நாளை (திங்கட்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பனியன் நிறுவனங்கள் பல விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்களில் நேற்று மாலை சம்பளத்துடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட இருக்கிறது. ஒரு சில நிறுவனங்களில் ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை போலீசார் மேற்கொண்டுள்ளனர்

Tags

Next Story