செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அண்ணா தொழிற்சங்க உட்பட பல சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒய்வு தொழிலாளர்கள் பணிமனை முன்பு பேருந்து வெளியே வராதபடி வாயிலை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பேருந்து பணிமனையை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் 59 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிலையில் தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு வழக்கம்போல காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், காலை அண்ணா தொழிற்சங்க உட்பட பல சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒய்வு தொழிலாளர்கள் காலை 7 மணியளவில் பணிமனை முன்பு பேருந்து வெளியே வராதபடி வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த செய்யாறு அனைத்து மகளீர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு தொழிலாளர் கலைந்து சென்றனர். அதன் பிறகு பேருந்துகள் வழக்கம்போல பணிமனையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்று அனைத்து வழித்தடத்திலும் பொது மக்களை ஏற்றி சென்றனர்.

Tags

Next Story