நாகர்கோவிலில் தொழிலாளர்களுக்கு  கத்திகுத்து - 6 பேர் மீது வழக்கு 

நாகர்கோவிலில் தொழிலாளர்களுக்கு  கத்திகுத்து - 6 பேர் மீது வழக்கு 
பைல் படம்
நாகர்கோவிலில் தீப்பெட்டி கேட்டு தொழிலார்களிடம் தகராறு செய்து கத்தியால் குத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலை பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சேர்ந்த ராஜசேகர் (34) என்ற தொழிலாளி நேற்று வேலை முடிந்து கூடாரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகர்கோவில் பகுதி டேவிட் ராஜ் (28) கணேஷ் (24) யூசுப் முபாசி (25) ஆகாஷ் (22), ஜெபின் (23), ஆதர்ஸ் (22) ஆகியோர் ராஜசேகரனிடம் தீப்பெட்டி கேட்டு தகராறு செய்தனர்.

இதை அடுத்து ஆத்திரமடைந்த ஆறு பேரும் சேர்ந்து ராஜசேகர் மற்றும் அவருக்கு ஆதரவாய் பேசிய பிஹார் மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் (24), உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கம்தா பிரசாத், ஹேமந்த் சவுத்ரி ஆகிய நான்கு பேரையும் கத்தியால் குத்தி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் 6 மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story