மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளர்கள் மறியல்
பைல் படம்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் பகுதியில் பிரான்ஸ் நாட்டு கார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் இருந்து 178 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4.ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதுவரை 17.முறை பேச்சு வார்த்தை நடத்தியும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் யாரையும் பணியில் சேர்த்துக் கொள்ள எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.
இதனால் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவில்லை எனக்கூறி பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன் தலைமையில் அதிமுக திருவள்ளூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரமணா, கம்யூனிஸ்ட், ,விடுதலை சிறுத்தைகள், பா.ம.கவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிற்சாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர் பி வி ரமணா உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாமக மாநில நிர்வாகி உட்பட பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் சிறுவர்கள், பெண்கள் உட்பட 80.பேரை போலீசார் தரதரவென இழுத்து குண்டுகட்டாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.