பூந்தமல்லி பாா்வைத்திறன் குறையுடைய அரசுப் பள்ளியில் ஆசிரியா் பணி

பூந்தமல்லி பாா்வைத்திறன் குறையுடைய அரசுப் பள்ளியில் ஆசிரியா் பணி
பார்வை திறன் குறைபாடுள்ள பள்ளி
பூந்தமல்லி பாா்வைத்திறன் குறையுடைய அரசுப் பள்ளியில் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி பாா்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் காலியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் பணிபுரிய வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செயல்படும் பாா்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பாட ஆசிரியா்-1 (அரசியல் அறிவியல்) மற்றும் பட்டதாரிஆசிரியா்கள் அறிவியல்-2, கணக்கு-1 என 4 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இந்த காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளன. மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு ஊதியம் முதுகலை பாட ஆசிரியருக்கு ரூ. 18,000 மற்றும் பட்டதாரிஆசிரியருக்கு ரூ. 15,000 வீதம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி: பட்டதாரிஆசிரியா் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியா் ஆகிய பணிகளுக்கு இந்தப் பணியிடங்களுக்கு மேற்காணும் கல்வித் தகுதியுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தகுதியான பணிநாடுநா்கள் இருப்பின் பஉப தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் இல்லையெனில், பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக நடத்தப்படும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னாா்வலா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தங்கள் எழுத்து மூலமாக விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதி சான்றிதழ்களுடன்,

வரும் 9-ஆம் தேதிக்குள் முதல்வா், பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி, சென்னை-56 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலகமாகவோ சமா்ப்பித்து பயன்பெறலாம்.

Tags

Next Story