திமுக சார்பில் நாளை செயற்குழு கூட்டம் - எம்பி அழைப்பு

திமுக சார்பில் நாளை செயற்குழு கூட்டம் - எம்பி அழைப்பு
X

எம்.பி


நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், ராஜேஷ்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை 14ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

தமிழகவனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். கூட்டத்தில், வருகின்ற 19ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள, இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

கூட்டத்தில் முன்னாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து திமுக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணியின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என எம்.பி ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story