விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் செயற்குழுக் கூட்டம்
விஷ்வ ஹிந்து பரிஷத்
தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் குமாரபாளையத்தில் செயற்குழுக் கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் செயற்குழு கூட்டம் கோட்ட தலைவர் சபரிநாதன் தலைமையில் நடந்தது. இதில் தமிழகத்தில் பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட்டு, ஒரு வேளை பூஜையாவது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், குமாரபாளையம் காசி விச்வேஸ்வரர் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் பட்டாவாக உள்ளது. அதனை மீட்க வேண்டும், மாற்று மாத வழிபாடு ஜெபக்கூடங்கள் கட்டப்படுகிறதா? என மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கிண்டல் செய்யும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும், போதை மாத்திரைகளை ஊசி மூலமாக உட்கொண்ட நபர்களை கண்டிபிடித்து நடவடிக்கை எடுத்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. க்கு பாராட்டு தெரிவித்தல், அனைத்து கோவில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், பாட புத்தகங்களை சுமப்பதை தவிர்க்கும் விதமாக, பள்ளியில் புத்தகங்கள் வைத்துகொள்ள பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், டிசம்பர் 6ல் ராமர் படம் வைத்து பூஜை செய்த நபர்களை கைது செய்த நடவடிக்கைக்கு கண்டனம், மற்றும் அதே நாளில் இஸ்லாமியர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி கொடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவிலுக்கு வேதங்கள் படித்த அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கோட்ட தலைவர் ஆடிட்டர் கஸ்தூரி, மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் உதயசூரியன், நகர தலைவர் வாசுதேவன், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story