தொற்றா நோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை முகாம்

X
தொற்றா நோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை முகாம்
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெற்ற தொற்றா நோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை நிகழ்ச்சியில் ஏராளமான தொழிலாளர்கள், பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கடலூர் மாவட்டத்தில் தொற்றா நோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை நிகழ்ச்சி இன்று நெய்வேலியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ.கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அரசு அதிகாரிகள், நெய்வேலி NLCIL நிறுவன அதிபர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏராளமான தொழிலாளர்கள், ஊழியர்களுடன் பொதுமக்களும் வருகை தந்து பயன்பெற்றனர்.
Next Story
