எம்.எல்.ஏ நிதியில் பணிகள் - ஆட்சியர் ச.உமா ஆய்வு
தொட்டியவலசு ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அருகில் இருந்த கால்நடை மருந்தகத்தில் அப்பகுதியில் பயன்பெறும் கால்நடைகளின் எண்ணிக்கை, கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், மருந்துகளின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து மருத்துவரிடம் ஆட்சியர் ச.உமா கேட்டறிந்தார்.
மேலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மத்துருட்டு பகுதியில் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ் பூசலையூர் ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளதையும், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அக்கியம்பட்டியில் அக்கியம்பட்டி – எருமப்பட்டி சாலை முதல் கொல்லிமலை செல்லும் சாலை வரையில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், துத்திக்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.


