புதிய மூலிகை மருந்து உருவாக்க பயிற்சி பட்டறை

புதிய மூலிகை மருந்து உருவாக்க பயிற்சி பட்டறை

பயிற்சி பட்டறை 

ஊத்தங்கரை அதியமான் கல்லூரியில் புதிய மூலிகை மருந்துகள் உருவாக்கம், மற்றும் மூலிகை தொழில்நுட்பத்தை உருவாக்குதல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது

ஊத்தங்கரை அதியமான் கல்லூரியில் புதிய மூலிகை மருந்துகள் தொழில்நுட்பத்தை உருவாக்குதல் பயிற்சி பட்டறை நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சீனிவாச நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பாக "புதிய மூலிகை மருந்துகள் உருவாகும் மற்றும் மூலிகை தொழில்நுட்பத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சிபட்டறை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சீனி திருமால் முருகன், பேசும் பொது இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம். தாவரங்களின் மருத்துவத்தன்மை மற்றும் மாணவிகள் சமுதாய பொறுப்புணர்வுகளுடன் விளங்க வேண்டும் என்றார். உடன் கல்லூரி செயலர் முனைவர் ஷோபா திருமால் முருகன் பங்கேற்று மாணவர்களிடையே மூலிகைகளின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார் பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story