பணிமனை திறப்பு விழா
இரவு நேரத்திலும் பணிமனை திறப்பு விழா. வேட்பாளருக்கு வரவேற்பு தெரிவித்த பொதுமக்கள். கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன். இன்று கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பரப்பு, மணல்மேடு,டெக்ஸ் பார்க் பகுதியில், மாலை நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அறிவிப்பு செய்யப்பட்ட பகுதியில், வழிநெடுகிலும் பிஜேபி மற்றும் கூட்டணி கட்சியினரும், தொண்டர்களும் அளித்த வரவேற்பை தொடர்ந்து சற்று காலதாமதமாக கரூரை அடுத்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணல்மேடு பகுதிக்கு வந்த வேட்பாளர் செந்தில்நாதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மலர்கள் தூவி வரவேற்பு தெரிவித்தனர். அப்போது சிறுமி ஒருவர் வேட்பாளர் செந்தில்நாதனை வரவேற்று திலகமிட்டதை ஏற்றுக்கொண்ட செந்தில்நாதன் அந்த சிறுமிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மணல்மேடு பகுதியில் நிறுவப்பட்டுள்ள புதிய தேர்தல் பணிமனையும் திறந்து வைத்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் அவருக்கு தலைப்பாகை அணிவித்து உரிய மரியாதை செய்தனர். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மலர்கள் தூவி வரவேற்றதை ஏற்றுக்கொண்ட வேட்பாளர் செந்தில்நாதன், தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அரவக்குறிச்சி கிராம பகுதியில் உள்ள பொதுமக்களை சந்திக்க புறப்பட்டு சென்றார். வேட்பாளர் செந்தில்நாதன் சூழ்நிலை அறிந்து மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.