உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் - ஏப்ரல் 2ஆம் தேதி

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு  நாள் - ஏப்ரல் 2ஆம் தேதி
X

   டாக்டர் .சி.கவியரசு

இந்தியாவில் சராசரியாக 2 கோடி பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் .ஆட்டிசம் என்பது மூளை நரம்பியல் வளர்ச்சி நிலையில் தகவல்களை பயன்படுத்தி புரிந்துகொள்ளும் திறனை தடுப்பது, பார்த்தல் ,கேட்டல் என உணரும் விஷயங்களை சராசரியாக பயன்படுத்த முடியாமல் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப் போவதே ஆட்டிசம் எனப்படும். ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடு தானே ஒழிய அது நோயல்ல இவ்வகை குறைபாடுஉள்ளவர்கள் அதீத புத்திசாலியாகவும் இருக்கவும் வாய்ப்பு உண்டு. புத்திசாலித்தனத்துக்கும் ஆட்டிசத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும் பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. ஆறு மாத முதல் மூன்று வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும்.

இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால் பலர் மூன்று வயதுக்குள் கண்டுபிடிக்க தவறி விடுகின்றனர் மூன்று வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து ஓரளவு குறைபாட்டை சரி செய்து விடலாம். ஆட்டிசம் விழிப்புணர்வின் முக்கிய அம்சம் தவறான எண்ணங்களை அகற்றுவது ஆகும். ஆட்டிசம் விழிப்புணர்வை அதிகரிப்பது என்பது தனி நபர்கள் அரசாங்கங்கள் சமூகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும் கூடுதலாக ஊடகப் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க பங்கு வைக்கிறது குறிப்பாக திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் ஆட்டிசம் கொண்ட நபர்களின் நேர்மறை மற்றும் அவர்களைப் பற்றிய துல்லியமான கருத்துக்களை சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

ஆட்டிசத்தின்அறிகுறிகள்:

1.எவருடனும் சேராமல் ஒதுக்கி இருப்பது .

2.பயம்,ஆபத்து. உணராமல் இருப்பது. 3.கண்களை பார்த்து பேசுவதை தவிர்ப்பது. 4.காரணம் இல்லாமல் அழுகை, சோகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது. 5.எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது. 6.தன்னந்தனியே சிரிப்பது வித்தியாசமான நடவடிக்கைகள் கைகளை தட்டுவது குதிப்பது போல எதையாவது செய்து கொண்டிருப்பது இவைதான் ஆட்டிசத்தின் அடிப்படைக் கூறுகள். டாக்டர் லியோ கார்னர் என்பவர் தான் ஆட்டிசம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார் மதியிறுக்கம் என்ற பெயரும் சில நேரங்களில் புறஉலகு சிந்தனை குறைபாடு உள்ளவர்கள் என்றும் அழைப்பது உண்டு.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த சமுதாய சூழலில் நிலை நிறுத்தி கொள்ள சில பயிற்சி முறைகள் உண்டு அதனை நாம் முறையாக எடுத்துக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர்வது உறுதி

சிகிச்சை முறைகள்:

1. ஆரம்ப கால பயிற்சி ,சிறப்பு கல்வி, ஆக்குபேஷனல் தெரபி ,நடத்தை சீராக்கல் பயிற்சி, பேச்சு பயிற்சி, உணர்வு தூண்டல் பயிற்சி கொடுத்தல் ஆகியவை முக்கிய சிகிச்சை முறைகள். 2.இசை ,நடனம், ஓவியம், ஸ்கட்டிஸ் என எல்லா வகையான வகுப்புகளையும் அவர்களுக்கு அளித்தல் அவசியம். 3.பெற்றோர்கள்தான் இவ்வகையான குழந்தைக்கு சிறந்த மருத்துவர் அதேபோல் நல்ல புரிந்துகொள்ள ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியப் பங்கேற்கிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2ஆம் தேதி ஆட்டிஸம் தினமாக கொண்டாடப்படுகிறது இதை ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது .

ஆட்டிஸம் குறைபாட்டை முழுவதும் குணப்படுத்த முடியாவிட்டாலும் இவ்வகையான பயிற்சிகள் மூலம் ஒழுங்கு நிலைக்கு கொண்டுவரமுடியும் பொதுவாக ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலை மிகவும் சங்கடமானது குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு தங்கள் உடல் நலத்தையும் கெடுத்து கொள்கின்றனர்.

ஆனால் அப்படி சோர்ந்து போக தேவையில்லை காரணம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு பயிற்சிகள் மூலம் ஒழுங்கு நிலைக்கு வந்து உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த சில நம்பிக்கை தரும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும் நம்பிக்கை தரும் மனிதர்கள் ஸ்டீபன் வில்ட் ஹையர் என்பவர் ஓவியத்திறமை சாதித்தவர், டெம்பிள் கிரான்டீன் விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்று சாதித்தவர், கிருஷ்ண நாராயண் இலக்கியவாதியாக இருந்து பல நூல்களை எழுதியவர் அதே போல் இன்னும் பலர் நம்பிக்கை தரும் மனிதர்களாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதலாக உள்ளார்கள் பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தையை கவனித்தால் அவர்களும் சாதனையாளர்களே .

டாக்டர் .சி.கவியரசு

Tags

Next Story