காஞ்சிபுரத்தில் உலக இரத்த தான விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா நர்சிங் கல்லூரி இணைந்து காஞ்சிபுரத்தில் நடத்திய ரத்ததான விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா நர்சிங் கல்லூரி இணைந்து காஞ்சிபுரத்தில் நடத்திய ரத்ததான விழிப்புணர்வு பேரணியை டிஎஸ்பி முரளி துவக்கி வைத்தார். உலக இரத்த தானம் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இரத்த தானத்தின் முக்கியத்துவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இரத்ததானம் செய்பவர்களின் ஆதரவை அங்கீகரிக்கவும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ரத்த தானம் செய்யும் நிலையில் ரத்த தானம் செய்பவர் மற்றும் பெறுபவர் இருவருமே பல்வேறு நல் பயன்களை அடைகின்றனர். அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா நர்சிங் கல்லூரி இணைந்து பொதுமக்களுக்கு ரத்ததான விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இப்பேரணியை காஞ்சிபுரம் டிஎஸ்பி முரளி , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்து காவலன் தெரு , மேட்டு தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு காமராஜர் தெரு பேரு பேருந்து நிலையம் வரை பொது மக்களுக்கு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பலகைகள் ஏந்தியும், அதன் பலன்களை கோஷமாக கூறி மாணவிகளுடன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் என அனைவரும் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மோதிலால் , கணேஷ், நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் என 100க்கும் மேற்பட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் ரத்ததான விழிப்புணர்வு மற்றும் ரத்தக்கொடை வழங்கப்பட்டது.
Next Story