அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா
உலக புத்தக தின விழா
சங்ககிரி:தேவண்ணகவுண்டனூர் அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நடுநிலைப்பள்ளி தீரன் சின்னமலை கலாச்சார மன்றம் ஆகியவை சார்பில் உலக புத்தக தின விழா பள்ளி தலைமை ஆசிரியயை கு.வசந்தாள் தலைமையில் நடைபெற்றது. தீரன் சின்னமலை கலாச்சார மன்ற ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் இரா. முருகன் புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சங்ககிரி கிளை செயலாளர் ரேகா அறிவியல் அறிஞர்கள் மேரி கியூரி , லூயிஸ் பாஸ்டர் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.பள்ளி வளாகத்தில் அறிவியல் அறிஞர்களின் புத்தக கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தொலை நோக்கியின் செயல்பாடு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாணவ,மாணவிகள் தொலைநோக்கி மூலம் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு தூரத்தில் உள்ள சங்ககிரி மலையினை உற்று நோக்கி பார்வையிட்டனர். ஆசிரியர்கள் ந. மு சித்ரா, க சீனிவாசன், ரா. ரமாமகேஸ்வரி, த.ஜெயந்தி, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story