உலகத் தாய்ப்பால் வார விழா மற்றும் சமுதாய வளைகாப்பு விழா

உலகத் தாய்ப்பால் வார விழா மற்றும் சமுதாய வளைகாப்பு விழா

உலகத் தாய்ப்பால் வார விழா மற்றும் சமுதாய வளைகாப்பு விழா

உலகத் தாய்ப்பால் வார விழா மற்றும் சமுதாய வளைகாப்பு விழா

உலக தாய்ப்பால் வார விழாவை ஒட்டி நாமக்கல் இந்திய மருத்துவ சங்கம், பெண்கள் மருத்துவப் பிரிவு, இன்னர்வீல் சங்கம், ரோட்டரி சங்கம், மகப்பேறு மருத்துவப்பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் சமுதாய வளைகாப்பு விழா நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள ரோட்டரி கிளப் வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கு ஒன்றரை வருடம் வரை தாய்ப்பாலை தவறாமல் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழாவில் கருவுற்ற கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு மதியஉணவாக கலவை சாதத்தை சாப்பிட்டனா்.

விழாவில் நாமக்கல் இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவின் தலைவி டாக்டர் மல்லிகா குழந்தைவேல், நாமக்கல் சுகாதார சேவை துணை இயக்குனர் மருத்துவர் க.பூங்கொடிசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனா். மோகனூர் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவா் கலைச்செல்வி, நாமக்கல் மகப்பேறு மருத்துவ பிரிவின் தலைவி மருத்துவா் சந்திரா பொன்னுசாமி, இன்னர்வீல் சங்க தலைவி சுகன்யா, இந்திய மருத்துவ சங்க தலைவர் மருத்துவா் சிவகுமார், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் விஸ்வநாதன் மற்றும் முக்கிய பிரமுகர் மருத்துவர்கள், ரோட்டரி சங்கத் தலைவர்கள், அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விழாவினை மருத்துவா் கவிதா சரவணகுமார் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story