அரசு மருத்துவக்கல்லூரியில் உலகப் புற்றுநோய் தின விழிப்புணர்வு
உலகப் புற்றுநோய் தின விழிப்புணர்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலகப் புற்றுநோய் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர் சிவகுமார் உலகப் புற்றுநோய் தினம் குறித்து சிறப்புரை ஆற்றினார். புற்றுநோய் அறுவை சிகிச்சை மூத்த உதவி மருத்துவர் அமுதன் வரவேற்புரை வழங்கினார். புற்றுநோய் மருந்தியல் துறை மருத்துவர் காந்திமதி உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். புற்றுநோய் கதிரியக்கத் துறையின் பேராசிரியர் மருத்துவர் லலிதா சுப்பிரமணியன் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தார். புற்றுநோயின் சிகிச்சை பெற்று மறுவாழ்வடைந்த நோயாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் கலைவாணி, பொது மருத்துவ துறை பேராசிரியர் மருத்துவர் ராஜவேல் முருகன், பொது அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியர் மருத்துவர் ராகேஷ் பொன்னையா, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மற்றும் அனைத்து துறை உதவி மருத்துவர்கள், உதவி பேராசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் காந்திமதி நன்றி கூறினார்.
Next Story